வேதாரண்யேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழா
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமணகோலத்தில் காட்சி கொடுத்த தலம். வேதங்கள் பூஜித்து மூடி கிடந்த கதவை அப்பரும், சம்பந்தரும் தேவார திருப்பதிகங்கள் பாடி திறந்ததாக வரலாறு. வேறு எங்கும் இல்லாத அளவில் துர்க்கையம்மன் சிரித்த முகத்துடன் விஷ்ணு துர்க்கையாக அருள்பாலிக்கும் ஒரே தலம்.. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.இந்த கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று இரவு யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் அலங்கரிக்கப்பட்ட கேடயத்தில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் வீதி உலா காட்சி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி வருகிற 30-ந் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரா்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.