கந்தசாமிபுரம் விநாயகர் கோவில் வருசாபிஷேகவிழா
கந்தசாமிபுரம் விநாயகர் கோவில் வருசாபிஷேகவிழா நடந்தது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் கந்தசாமிபுரம் செல்வ சக்தி விநாயகர் கோவில் 5-ம் ஆண்டு வருசாபிஷேக நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு யாகம் மற்றும் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடந்தது. இதனைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு செல்வ சக்தி விநாயகருக்கு வருசாபிஷேக விழா நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கந்தசாமிபுரம் ஊர் மக்கள் செய்திருந்தனர்.