கணபதிசமுத்திரம் நடுநிலைப்பள்ளியில்புதிய வகுப்பறையை மாணவியை வைத்து திறந்து வைத்த எம்.எல்.ஏ

கணபதிசமுத்திரம் நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறையை மாணவியை வைத்து ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

Update: 2023-03-16 18:45 GMT

ஏரல்:

கணபதிசமுத்திரம் நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில் புதியவகுப்பறையை மாணவியை வைத்து ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

புதிய வகுப்பறை திறப்பு

ஏரல் அருகே உள்ள கணபதிசமுத்திரத்தில் யூனியன் நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. அதன் திறப்புவிழாவுக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, புதிய வகுப்பறை கட்டிடத்தை ஒரு மாணவியை அழைத்து ரிப்பனை வெட்டி திறக்க வைத்தார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் அன்னலட்சுமி அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, கொட்டாரக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் துரை, தி.மு.க. மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஆனந்த், சூழவாய்க்கால் பஞ்சாயத்து தலைவர் வேங்கையன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன், ஏரல் நகர தலைவர் பார்க்கர் அலி, வட்டாரத் தலைவர் தாசன், ஸ்ரீவைகுண்டம் யூனியன் கவுன்சிலர் பாரத், உமரிக்காடு பஞ்சாயத்து துணைத்தலைவர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேய்க்குளம்

இதேபோன்று, கருங்குளம் யூனியன் அரசர்குளம் - மணல்விளை வரை புதியசாலை, சேரக்குளம் - மேலசிரிந்தூர் வரை ரூ.2.13 கோடியில் புதியசாலையும், ஆழ்வார்திருநகரி ஒன்றியம் பேய்க்குளம் - முனைஞ்சிப்பட்டி வரை ரூ.3.20 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி பேய்க்குளத்தில் நடந்தது. இதில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. பங்கேற்று சாலைப்பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சித் தலைவர் பெரியசாமி ஸ்ரீதர், மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரம்மசக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி கோட்ட நெடுஞ்சாலை பொறியாளர் பொன் பெருமாள் வரவேற்றார். இதில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், ஆழ்வார்திருநகரி வட்டாரத் தலைவர் கோதாண்டராமன், பேய்குளம் டாக்டர் ரமேஷ்பாபு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ், வட்டார செயலாளர் மோகன்ராஜ், வட்டார பொதுச் செயலாளர் சிவசக்திவேல், வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் சிவபெருமாள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவைகுண்டம்

ஸ்ரீவைகுண்டம் யூனியன் பராக்கிரமபாண்டி ஊராட்சியில் ரூ.66 லட்சம் புதியசாலை அமைத்தல், பத்மநாபமங்கலம் குமரகுருபரர் கலை அறிவியல் கல்லூரி சாலையில் ரூ.18½ லட்சத்தில் புதிய சாலை அமைத்தல் பணிகளை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தி.மு.க மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி,

பத்மநாபமங்கலம் ஊராட்சி தலைவர் வைகுண்டபாண்டியன்,

நெடுஞ்சாலைத்துறை உதவிதிட்ட பொறியாளர் செந்தில்குமார், இளநிலை பொறியாளர் சிவசண்முகநாதன், ஒப்பந்ததாரர் ஆர்.எஸ்.முத்தையா, சாலை ஆய்வாளர் கணேசன், உதவியாளர் வைகுண்டம் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் ஸ்ரீமூலக்கரையில் மகளிர் இலவச கட்டண பஸ்சை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் யூனியன் அலுவலகத்தில் பெண்களுக்கு இலவச ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் 75 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை எம்.எல்.ஏ. வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர், வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் சிவராஜன், செல்வி, ஸ்ரீவைகுண்டம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (பொறுப்பு) காயத்ரி, மேற்பார்வையாளர் பிரிக்ஸ்ஓயிட், காங்கிரஸ் வட்டார தலைவர் நல்லக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து கருங்குளம் யூனியன் தெற்கு காரசேரி முதல் சிவந்திப்பட்டிக்கு ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியையும் ரூ.2.13 கோடியில் அரசர்குளம்-மணல் விளை சாலைப்பணியையும் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்