பணம் வைத்து சூதாட்டம் வடமாநில வாலிபர்கள் 8 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய வடமாநில வாலிபர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனா்;
பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் பணிக்கம்பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுகுதியில் 8 பேர் உட்கார்ந்து கொண்டு சீட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். உடனே அவர்களை போலீசார் பிடித்து விசாாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 'அவர்கள் மேற்கு வங்காளம் மாநிலம், பர்கானாஸ் பகுதி சேர்ந்த சுகுமார் சர்தார் (வயது 24), பிரோ சென்சிதா (24), அருண் காயல் (26), சானு ஹால்டர் (28) உள்பட 8 பேர் என்பதும், அவர்கள் பணம் வைத்து சூதாடியதும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 8 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து ரூ.700-யும் பறிமுதல் செய்தனர்.