அடுக்குமாடி குடியிருப்பில் பணம் வைத்து சூதாட்டம்

அடுக்குமாடி குடியிருப்பில் பணம் வைத்து சூதாட்டம்

Update: 2023-04-15 18:45 GMT

கோவை

கோவை ஆர்.எஸ்.புரம், ஆர்.ஆர். லே அவுட்டில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பெரிய அளவில் சூதாட்டம் நடப்பதாக ஆர்.எஸ்.புரம் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் அங்கு உதவி போலீஸ் கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள்.

அப்போது அங்குள்ள ஒரு அறையில் பணம் வைத்து சூதாட்டம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பிரசாத் (வயது 37), சந்தோஷ் குமார் (34), தனபால் (37), விக்னேஷ் (42), கணேசன் (36), ஸ்ரீகாந்த் (47), கணேஷ்குமார் (40), மதன்குமார் (52), அசோக்குமார் (45) சிவக்குமார் (50), மனோஜ் (34), அருண்குமார் (40), செல்வம் (36), கண்ணா மாறன் (48), விஜயசங்கர் (31), கார்த்திக் (33), கிருஷ்ணமுத்து (37), கார்த்திக் குமார் (40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சூதாட பயன்படுத்தப்பட்ட ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களில் பலர் நகை பட்டறை அதிபர்கள், வியாபாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்