பணம் வைத்து சூதாட்டம்; 4 பேர் கைது
பணம் வைத்து சூதாட்டடிய 4 பேர் கைது செய்யப்பட்டனா்.
திண்டிவனம்,
திண்டிவனம் அடுத்த கூச்சி குளத்தூர் பகுதியில் ஒலக்கூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஞ்சர் கடை பின்புறத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 4 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், திண்டிவனம் அடுத்த நற்குணம் பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 34), கூச்சி குளத்தூர் சகாயராஜ் (58), நற்குணம் கமலஹாசன் (39), சென்னை கொருக்குப்பேட்டை சேகர் (58) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.