சூதாடிய வாலிபர் கைது

வடமதுரை அருகே சூதாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-28 20:00 GMT

வடமதுரை அருகே உள்ள கொம்பேறிபட்டி பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொம்பேறிபட்டி அரசு பள்ளியின் பின்புறம் 3 பேர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது அவர்களில் 2 பேர் தப்பியோடி விட்டனர். அதில் ஒருவர் மட்டும் போலீசில் சிக்கினார். விசாரணையில் அவர், ஸ்ரீராமபுரம் பகுதியை சேர்ந்த ராசு (வயது 34) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய வடமதுரையை சேர்ந்த வெங்கடேஷ் (45), அய்யலூரை சேர்ந்த சேகர் (43) ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்