எடப்பாடி அருகே சூதாட்ட கும்பல் கைது; ரூ.4½ லட்சம் பறிமுதல்

எடப்பாடி அருகே சூதாட்ட கும்பல் கைது செய்யப்பட்டது. இந்த கும்பலில்டம் இருந்து ரூ.4½ லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update: 2022-09-14 22:26 GMT

எடப்பாடி:

எடப்பாடி அருகே உள்ள சித்தூர் கிராமம் காமராஜர் நகரை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் வீட்டின் பின்புறம் பணம் வைத்து சிலர் சூதாடுவதாக சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தனிப்படை போலீசார், அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 10 பேர் கொண்ட கும்பலை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் சித்தூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், அடிக்கடி அந்த பகுதியில் சூதாடி வந்ததும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 46 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்