பணம் வைத்து சூதாடிய 7 பேர் மீது வழக்கு
பணம் வைத்து சூதாடிய 7 பேர் மீது வழக்கு
அவினாசி
அவினாசி போலீசார் நேற்று சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவினாசி ராயம்பாளையம் ரோட்டில் சங்கமம் குளம் பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக மடத்துப்பாளையத்தை சேர்ந்த சரவணகுமார் (வயது 37), காந்திபுரம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (52), தேவராயம்பாளையம் பகுதியை சேர்ந்த தியாகராஜன் (43), மோகன் (46), முகமது யாசிக் (34), திருமுருகன் பூண்டி பகுதியைச் சேர்ந்த காளியப்பன் (60), கருமாபாளையத்தைச் சேர்ந்த சித்திக் (47) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து 52 கார்டுகள் கொண்ட சீட்டு கட்டு மற்றும் ரூ. 850-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.
---------------