நாணயத்தை சுண்டிவிட்டு சூதாட்டம்; 2 பேர் கைது

வடமதுரை அருகே நாணயத்தை சுண்டிவிட்டு சூதாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-07 20:45 GMT

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள புத்தூர் பகுதியில் வடமதுரை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள புளியந்தோப்பில் 6 பேர் கொண்ட கும்பல், நாணயத்தை சுண்டிவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர்களில் 2 பேர் மட்டும் சிக்கினர். மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் பிடிபட்ட நபர்களிடம் போலீசார் விசாரித்தனர். அதில், அவர்கள் 2 பேரும் பிச்சம்பட்டியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 20), புத்தூரை சேர்ந்த பழனிசாமி (45) என்பதும், தப்பி ஓடியவர்கள் அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி (42), செல்லன் (45), காரிப்பூவன் (50), திருப்பதி (25) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து கோபாலகிருஷ்ணன் மற்றும் பழனிசாமியை கைது செய்தனர். மேலும் தப்பிஓடிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்