ஓசூர்:
ஓசூர் அருகே பாகலூர் பக்கமுள்ள சின்ன முத்தாலி பகுதியில் பாகலூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி காளேஸ்வரத்தை சேர்ந்த ஜனார்த்தன ரெட்டி (வயது 35) என்பவரை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். கைதானவரிடம் இருந்து ரூ.9,500 மற்றும் 2 மோட்டர் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.