சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது
ஆம்பூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த துத்திபட்டு பகுதியில் காட்டன் சூதாட்டம் நடப்பதாக உமராபாத் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் சோதனை நடத்தினர்.
இதில் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை (வயது 55) என்பவர் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ.1000 பணம் மற்றும் காட்டன் சூதாட்டத்தில் பயன்படுத்தும் பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.