காயல்பட்டினத்தில் காயிதே மில்லத் பிறந்த தின விழா
காயல்பட்டினத்தில் காயிதே மில்லத் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
ஆறுமுகநேரி:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நிறுவன தலைவர் காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாகிப்பின் பிறந்த தினவிழா காயல்பட்டினம் நகர முஸ்லிம் லீக் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இதனை ஒட்டி காயல்பட்டினத்தில் உள்ள 18 இடங்களில் முஸ்லிம் லீக் கட்சி கொடிகளை கட்சி நிர்வாகிகள் ஏற்றினர்.தொடர்ந்து நகர முஸ்லிம் லீக் அலுவலகத்தில் நகர தலைவர் முகமது ஹசன் கொடியேற்றினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மஹ்மூது ஹசன் மற்றும் மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுலா அஸ்ஹாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகர செயலாளர் அபூசாலிக், மாவட்ட துணை செயலாளர்கள் பெத்தப்பா சுல்தான், காதர் சாகிப், காயிதேமில்லத் பேரவை செயலாளர் வாவு சம்சுதின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.