நலிவடைந்த கூட்டுறவு வங்கிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும்-ஊழியர்கள் சங்க தலைவர் வலியுறுத்தல்

நலிவடைந்த கூட்டுறவு வங்கிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என ஊழியர்கள் சங்க தலைவர் வலியுறுத்தினார்.

Update: 2022-09-18 17:57 GMT

புதுக்கோட்டையில் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்க பேரவை கூட்டத்தில் பங்கேற்ற அகில இந்திய கூட்டு வங்கி ஊழியர்கள் சங்க தலைவரும், தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்க மாநில செயலாளருமான வைரப்பன் நிருபர்களிடம் கூறுகையில், ''நகைக்கடன் மற்றும் விவசாய கடன் தள்ளுபடி அறிவித்ததில் வங்கிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை அரசு வழங்க வேண்டும். மத்திய அரசு கூட்டுறவு வங்கிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதால் எந்த வங்கி கிளையையும் உடனடியாக கலைப்பதற்கு அதிகாரம் உள்ளது. அதனால் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்கு கீழ் கூட்டுறவு வங்கிகள் செயல்பட வேண்டும். தமிழகத்தில் நலிவடைந்துள்ள கூட்டுறவு வங்கிகளுக்கு தலா ரூ.50 லட்சம் நிதி ஒதுக்க வேண்டும்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்