முதியோர் இல்லத்திற்கு நிதியுதவி

கோத்தகிரியில் முதியோர் இல்லத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது.;

Update:2023-10-19 00:30 IST

கோத்தகிரி தாலுகா ஈழுவா, தீயா நலச்சங்கத்தின் மறைந்த முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.ஜி. சாந்தகுமாரின் 14-வது நினைவு தினத்தையொட்டி, கோத்தகிரியில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது. கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் சாலையில் உள்ள ஆதரவற்ற முதியோர் பாதுகாப்பு இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வி.கே.ஜி.சாஸ்த் சாந்தகுமார் கலந்து கொண்டு முதியோர் இல்லத்திற்கு காசோலையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்