அடிப்படை வசதிகள் செய்ய ரூ.1¼ கோடி நிதி ஒதுக்கீடு

கந்திலி பகுதியில் உள்ள ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் செய்ய ரூ.1 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவர் தெரிவித்தார்.

Update: 2023-08-18 19:13 GMT

ரூ.1¼ கோடி ஒதுக்கீடு

கந்திலி ஒன்றியக் குழு கூட்டம், ஒன்றியக் குழு தலைவர் திருமதி திருமுருகன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் நேரு வரவேற்றார். துணைத் தலைவர் மோகன் குமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பேசினர். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

திருமதி திருமுருகன், தலைவர்:- ஒன்றிய கவுன்சிலர்கள் தங்களது ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொள்ள ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை என 21 வார்டுகளுக்கு ரூ.1 கோடியே ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அனைவரும் தங்களது ஊராட்சி பகுதிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம், சாலை, கால்வாய், பேவர் பிளாக் சாலை போன்ற தேவையை எழுதிக் கொடுத்தால் உடனடியாக அந்த பகுதிகளில் டெண்டர் வைக்கப்பட்டு பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

காலை சிற்றுண்டி திட்டம்

முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.

எனவே செவ்வாத்தூர், கசிநாயக்கன்பட்டி, பேராம்பட்டு, குனிச்சி, உள்பட பல்வேறு பள்ளி சத்துணவு மைய கட்டிடங்கள் அவசர அவசியத்தை கருத்தில் கொண்டு உடனடியாக சமையலறை கட்டிடம் பழுது நீக்கம், மேற்கூரை சரி செய்யவும் ஒன்றிய பொதுநிதியிலிருந்து சுமார் ரூ.15 லட்சம் செலவு செய்ய மன்றம் அனுமதிக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்