முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கியது

பெரியகுளம், கூடலூரில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

Update: 2022-10-25 16:58 GMT

பெரியகுளம் தென்கரையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று தொடங்கியது. இதையொட்டி சண்முகர்-வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மேலும் கந்தசஷ்டி தொடக்க விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் நேற்று கோவிலுக்கு வருகை தந்தனர்.

அவர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். கந்தசஷ்டி விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளாக வருகிற 30-ந்தேதி சூரசம்ஹாரமும், 31-ந்தேதி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. இதையொட்டி தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுகிறது.

இதேபோல் கூடலூரில் உள்ள கூடல் சுந்தரவேலவர் கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று தொடங்கியது. முதல் நாளான நேற்று சுந்தரவேலவருக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை மற்றும் மகளிர் குழுவினரின் தெய்வீக கூட்டு வழிபாடு பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் 11 மணிக்கு மேல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி தொடங்கியது.

இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு கையில் காப்புக் கட்டி விரதம் தொடங்கினர். விழாவில் வருகிற 30-ந்தேதி காலையில் பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியும், மாலையில் சக்திவேல் வாங்குதல், சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. மறுநாள் 31-ந்தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்