மாரண்டஅள்ளியில் எருதாட்டம்

Update: 2023-01-18 18:45 GMT

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளி பஸ் நிலையத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி எருதாட்டம் நடந்தது. இதில் வேங்குதெரு, சொவத்தம்பட்டி, முகமதியர் தெரு, சந்தை வீதி, பைபாஸ் ரோடு, ஆணங்கிணற்று தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. முன்னதாக திரவுபதி அம்மன் கோவில் முன்பு காளைகள் வரிசையாக நிறுத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து ஊர் கவுண்டர், மந்திரி கவுண்டர், தர்மகர்த்தா ஆகியோர் முன்னிலையில் காளைகள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு, அவை அவிழ்த்து விடப்பட்டன. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு, காளைகளை அடக்கினர். இதனை மாரண்டஅள்ளி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். விழாவையொட்டி மாரண்டஅள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்