உல்லாச வாழ்க்கைக்காக குழந்தையை தீர்த்து கட்டினேன்
தாரமங்கலம் அருகே மது போதையில் உல்லாச வாழ்க்கைக்காக குழந்தையை தீர்த்து கட்டியதாக கைது செய்யப்பட்ட தாய் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தாரமங்கலம்
தாரமங்கலம் அருகே மது போதையில் உல்லாச வாழ்க்கைக்காக குழந்தையை தீர்த்து கட்டியதாக கைது செய்யப்பட்ட தாய் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கள்ளக்காதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்த மல்லேஷ். இவருக்கும், கோவை மாவட்டம் வடவள்ளியை சேர்ந்த கணவரை பிரிந்த கலைவாணி (வயது 27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கலைவாணிக்கும், முதல் கணவருக்கும் பிறந்த கார்த்திகா என்ற ஒரு வயதில் பெண் குழந்தை இருந்தது.
இந்த நிலையில் கள்ளக்காதலர்கள் குழந்தையுடன் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள காடம்பட்டிக்கு வந்து அங்குள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர். சம்பவத்தன்று இரவு கலைவாணியும், மல்லேசும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது குழந்தை அழுதது. இதனால் ஆத்திரம் அடைந்த கலைவாணி, மல்லேஷ் இருவரும் குழந்தையை சுவற்றில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த குழந்தையை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு இருவரும் தலைமறைவாகி விட்டனர். இதற்கிடையே குழந்தை இறந்து விட்டது. இதை அறிந்ததும் கள்ளக்காதலர்கள் தப்பி செல்ல முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மல்லேஷ், கலைவாணி ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் கலைவாணி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
கண்டிப்பு
எனக்கும், சத்தியமங்கலம் அருேக புதுவடவள்ளியை சேர்ந்த உறவினர் சக்திவேல் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தன. பின்னர் எனக்கும் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது எனது கணவருக்கு தெரியவரவே அவர் என்னை கண்டித்தார். இதனால் நான் கணவரை பிரிந்து எனது காதலனுடன் சத்தியமங்கலம் பகுதியில் கடந்த 6 மாதமாக குடும்பம் நடத்தி வந்தேன்.
பின்னர் அவருடன் தகராறு ஏற்பட்டதால் கோபித்து கொண்டு குழந்தையுடன் அருகிலுள்ள மாசாணி அம்மன் கோவிலுக்கு சென்றேன். அப்போது குழந்தை பசியால் அழுது கொண்டு இருந்தபோது அங்கு வந்த மல்லேஷ் என்னிடம் பேச்சு கொடுத்தார். அப்போது நான் குழந்தைக்கு பால் வாங்கி கொடுக்குமாறு கேட்டேன். அவரும் வாங்கி கொடுத்துவிட்டு என்னை பற்றிய விவரங்களை கேட்டார்.
நிம்மதியாக இருக்க முடியாது
இதையடுத்து அவர் உன்னையும் குழந்தையும் பார்த்து கொள்கிறேன் என்று கூறினார். பின்னர் நாங்கள் காடம்பட்டிக்கு வந்தோம். இங்கு வேலை செய்து வந்தபோது மல்ேலஷ் இரவு நேரத்தில் மது வாங்கி வந்து குடித்துவிட்டு என்னுடன் உல்லாசமாக இருந்தார். அப்போது எனக்கும் மதுவை ஊற்றி கொடுத்து குடிக்க வைத்தார். நானும் அவருடன் மது குடித்து விட்டு 2 பேரும் உல்லாசமாக இருந்தோம். அப்போது குழந்தை அழுது கொண்டே இருந்தது. இந்த குழந்தை இருப்பதால் யாருடனும் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்று கருதி குழந்தையை தூக்கி சுவற்றில் அடித்ததில் இறந்துவிட்டது என்று நினைத்து நாங்கள் போதையில் தூங்கி விட்டோம்.
பின்னர் மறுநாள் குழந்தை அழும் சத்தம் கேட்டு சூளையில் இருந்த மேலாளர் எங்களிடம் வந்து ரூ.1,500 மற்றும்மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை கொடுத்து அருகி்ல் உள்ள மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினார். இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்து விட்டு நாங்கள் பெங்களுரு அருகே ஒரு சூளையில் வேலைக்கு சேர்ந்தோம். இந்த நிலையில் எங்களை போலீசார் கைது செய்து விட்டனர். மேலும் தான் கள்ளக்காதல் மோகத்தில் கணவர் மற்றும் முன்னாள் காதலனை உதறி விட்டு மல்லேசை நம்பி வந்து குழந்தையை கொன்று விட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.