சதுரகிரி கோவிலில் பவுர்ணமி வழிபாடு
சதுரகிரி கோவிலில் நடைபெற்ற பவுர்ணமி வழிபாட்டில் பக்தர்கள் குவிந்தனர்.
வத்திராயிருப்பு,
சதுரகிரி கோவிலில் நடைபெற்ற பவுர்ணமி வழிபாட்டில் பக்தர்கள் குவிந்தனர்.
பவுர்ணமி வழிபாடு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர்.
காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் மலைப்பாதை வழியாக சென்றனர். தொடர் விடுமுறை என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.
சிறப்பு அபிஷேகம்
பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம், நெய் உள்ளிட்ட 18 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பவுர்ணமி வழிபாட்டில் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தாணிப்பாறை அடிவாரப்பகுதி மற்றும் நீரோடை பகுதிகளில் போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.