பவுர்ணமி சிறப்பு வழிபாடு

புளியரை மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2022-10-09 18:45 GMT

செங்கோட்டை:

புளியரை வழிகாட்டும் மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில் மாதாந்திர பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவில் கருப்பசாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. அதனை தொடா்ந்து அருள் வாக்கு சித்தர் ஐயப்பன் சாமி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சியும், தொடா்ந்து அன்னதானமும் நடந்தது. விழாவில் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்