கோவில்பட்டியில் எரிபொருள் சிக்கன கருத்தரங்கு

கோவில்பட்டியில் எரிபொருள் சிக்கன கருத்தரங்கு நடந்தது.

Update: 2022-06-14 12:56 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மத்திய பெட்ரோலிய சேமிப்பு மற்றும் எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் எரிபொருள் சிக்கனம் குறித்த கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கத்திற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி நெடுஞ்செழிய பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தனியார், மினி பஸ் ஓட்டுனர்கள், பயிற்சிப்பள்ளி நிர்வாகிகள், ஓட்டுநர்கள், லாரி ஓட்டுநர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் மதுரை மத்திய பெட்ரோலிய சேமிப்பு மற்றும் எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் எம். ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எரிபொருள் சிக்கனம், சாலை பாதுகாப்பு, மாசு கட்டுப்பாடு குறித்து பேசினார். கருத்தரங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்