199 ேபருக்கு இலவச வீட்டுமனை பட்டா

199 ேபருக்கு இலவச வீட்டுமனை பட்டா

Update: 2022-12-31 12:25 GMT

குண்டடம்

குண்டடம் ஊராட்சி ஒன்றியம் எல்லப்பாளையம்புதூர் தனியார் திருமண மண்டபத்தில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் எஸ்.வினீத் தலைமை தாங்கினார். தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசன் முன்னிலை வகித்தார். விழாவில் 199 பேருக்கு ரூ.80 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

முன்னதாக செட்டிபாளையத்தில் பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், காங்கயம் தாசில்தார் புவனேஸ்வரி, தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவசெந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன், பேரூர் செயலாளர் அன்பரசு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராணா பத்மநாபன், குண்டடம் வட்டார் வளர்ச்சி அலுவலர்கள் செல்லமுத்து, ஹரிஹரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்