தூத்துக்குடியில் இருந்து700 டன் உரம் நெல்லைக்கு சென்றது
தூத்துக்குடியில் இருந்து 700 டன் உரம் நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டது.
நெல்லை மாவட்டத்திற்கு அவ்வப்போது வெளிமாநிலங்களில் இருந்து அரிசி, கோதுமை மற்றும் தூத்துக்குடியில் இருந்து உரம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் சரக்கு ரெயில்கள் மூலம் கொண்டு வரப்படுகின்றன.
அதேபோல் நேற்று காலையில் தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயில் மூலம் சுமார் 700 டன் உரம் நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதில் யூரியா, டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் அடங்கும். இந்த உரங்கள் அனைத்தும் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.