திருவாரூர் மாவட்டத்தில் இருந்து ரெயில் மூலம் 2 ஆயிரம் டன் நெல் ஈரோட்டுக்கு வந்தது
2 ஆயிரம் டன் நெல்
திருவாரூர் மாவட்டத்தில் இருந்து ரெயில் மூலம் 2 ஆயிரம் டன் நெல் ஈரோட்டுக்கு வந்தது.
2 ஆயிரம் டன் நெல்
ஈரோடு மாவட்ட பொது வினியோக திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து நெல், அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இருந்து நெல் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நீடாமங்கலம் பகுதியில் 2 ஆயிரம் டன் நெல், ஈரோடு மாவட்ட பொது வினியோக திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் 40 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரெயில் மூலம், ஈரோடு ரெயில்வே பணிமனைக்கு நேற்று வந்தது.
நுகர்பொருள் வாணிப கழகம்
இதைத்தொடர்ந்து ரெயிலில் இருந்து நெல் மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் இறக்கி லாரிகளில் ஏற்றினார்கள். பின்னர் அந்த நெல் மூட்டைகள் ஈரோட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நெல் மூட்டைகள் அரிசி அரவை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு, அரிசியாக மாற்றப்பட்டு, பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.