பேரூராட்சி கூட்டத்தில் இருந்து பா.ஜனதா கவுன்சிலர்கள் வெளிநடப்பு

வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை எனக்கூறி குலசேகரம் பேரூராட்சி கூட்டத்தில் இ்ருந்து பா.ஜனதா கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2022-11-29 20:56 GMT

குலசேகரம், 

வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை எனக்கூறி குலசேகரம் பேரூராட்சி கூட்டத்தில் இ்ருந்து பா.ஜனதா கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பேரூராட்சி கூட்டம்

குலசேகரம் பேரூராட்சி மன்ற கூட்டம், பேரூராட்சி தலைவர் ஜெயந்தி ஜேம்ஸ் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு செயல் அலுவலர் அம்புஜம் முன்னிலை வகித்தார்.

இதில் துணைத்தலைவர் ஜோஸ் எட்வர்ட் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேரூராட்சியில் செய்ய வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக 12-வது வார்டில் பல்வேறு சமுதாயங்களின் மயானங்கள் அமைந்துள்ள பகுதிக்கு தெருவிளக்கு, தண்ணீர் வசதி செய்யவும், பேரூராட்சிப் பகுதியில், அனைத்து தெரு விளக்குகளிலும் எல்.இ.டி. பல்புகள் பொருத்தவும், வீடுகள் அனைத்திற்கும் குடிநீர் வினியோகம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

பா.ஜனதா கவுன்சிலர்கள் வெளிநடப்பு

இந்த நிலையில், பா.ஜனதா கவுன்சிலர்கள் ராதாதங்கராஜ், தங்கப்பன், சிவகுமார், ராஜையன், கண்ணன், சந்தோஷ் ஆகியோர் தங்களது வார்டுகளில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறாமல் புறக்கணிக்கப்படுவதாக கூறி கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு செய்தனர்.

இதுகுறித்து பேரூராட்சி தலைவர் ஜெயந்தி ஜேம்ஸ் கூறும் போது, பேரூராட்சியில் அனைத்து வார்டுகளிலும் பாரபட்சமின்றி வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. பா.ஜனதா கவுன்சிலர்களின் வார்டுகளில் வளர்ச்சிப் பணிகள் செய்யப்படாமல் புறக்கணிக்கப்படுகின்றன என்று கூறுவதில் உண்மை இல்லை என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்