வருகிற 9-ந் தேதி முதல் திருச்சி-மானாமதுரை ரெயில் காரைக்குடியுடன் நிறுத்தம்

வருகிற 9-ந் தேதி முதல் திருச்சி-மானாமதுரை ரெயில் காரைக்குடியுடன் நிறுத்தப்படுகிறது

Update: 2023-09-06 21:10 GMT


தென்னக ரெயில்வேக்கு உள்பட்ட மதுரை, திருச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட கோட்டங்களில் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சியில் இருந்து காரைக்குடி வழியாக மானாமதுரை வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் வருகிற 9-ந் தேதி முதல் காரைக்குடியுடன் நிறுத்தப்படுகிறது.

அதன்படி, இந்த ரெயில்கள் (வ.எண்.06829/06830) இரு மார்க்கங்களிலும் காரைக்குடி-மானாமதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, திருச்சியில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்படும் ரெயில் மதியம் 12.10 மணிக்கு காரைக்குடி ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரெயில் காரைக்குடியில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.35 மணிக்கு திருச்சி ரெயில் நிலையம் சென்றடைகிறது.

Tags:    

மேலும் செய்திகள்