தாளவாடியில் இருந்து கர்நாடகாவுக்கு சரக்கு ஆட்டோவில் 300 கிலோரேஷன் அரிசி கடத்தல்2 பேர் கைது
தாளவாடியில் இருந்து கர்நாடகாவுக்கு சரக்கு ஆட்டோவில் 300 கிலோரேஷன் அரிசி கடத்தல்2 பேர் கைது
தாளவாடியில் இருந்து கர்நாடகாவுக்கு சரக்கு ஆட்டோவில் 300 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரேஷன் அரிசி
தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான அருள்வாடி என்ற இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு ஆட்டோ வந்தது. அதனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 12 மூட்டைகள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்தபோது உள்ளே ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் எடை 300 கிலோ ஆகும்.
கடத்தல்
இதைத்தொடர்ந்து போலீசார் லாரியில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலம் நரசிபுரம் பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் (வயது 30), முஷவீர் பாஷா (26) ஆகியோர் என்பதும், இவர்கள் தாளவாடியில் இருந்து கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து ரேஷன் அரிசியை கடத்தியதாக அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசியுடன் சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.