மருதூர் அணையில் இருந்துபுத்தன்தருவை குளத்துக்கு தண்ணீர் திறந்து விட கோரிக்கை

மருதூர் அணையில் இருந்து புத்தன்தருவை குளத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2022-12-27 18:45 GMT

தட்டார்மடம்:

சாஸ்தாவநல்லூர் விவசாய நலச்சங்க செயலர் லூர்துமணி தலைமையில் துணைத் தலைவர் ரவிச்சந்திரன், பொருளாளர் ரூபேஷ்குமார் மற்றும் விவசாயிகள் நேற்று கலெக்டர் செந்தில்ராஜை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அதில், "சாத்தான்குளம் பகுதி மழை மறைவு பிரதேசமாக உள்ளது. நடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை மூலம் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. இதனால் சாத்தான்குளம் தாலுகாவில் சாஸ்தாவிநல்லூர், முதலூர், பள்ளக்குறிச்சி, படுக்கப்பத்து, கொம்மடிக்கோட்டை, அரசூர், திருப்பணி புத்தன்தருவை கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் புத்தன்தருவை, வைரவம்தருவை குளங்கள் தண்ணீரின்றி வறன்டு காணப்படுகிறது. எனவே கருணை அடிப்படை.யில் மருதூர் அணையில் இருந்து புத்தன்தருவை, வைரவம் தருவைக்கு சடையனேரி கால்வாய் வழியாக தண்ணீர் திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்