அந்தியூர் பெரிய ஏரியில் இருந்து அருவிபோல் ஆர்ப்பரித்து கொட்டிய நீர்

அந்தியூர் பெரிய ஏரியில் இருந்து அருவிபோல் ஆர்ப்பரித்து கொட்டிய நீரில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனர்.

Update: 2022-11-06 23:57 GMT

அந்தியூர்

அந்தியூர் பெரிய ஏரியில் இருந்து அருவிபோல் ஆர்ப்பரித்து கொட்டிய நீரில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனர்.

அந்தியூர் பெரிய ஏரி

அந்தியூர் பர்கூர் மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்தியூரை அடுத்த வரட்டுப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன்காரணமாக வரட்டுப்பள்ளம் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி அதில் உபரிநீர் கடந்த ஒரு மாதமாக வெளியேறி வருகிறது.

அவ்வாறு வெளியேறிய உபரிநீரானது கெட்டி சமுத்திரம் ஏரி, அந்தியூர் பெரிய ஏரிக்கு சென்றது. இதில் அந்தியூர் பெரிய ஏரி நிரம்பி அதில் இருந்து உபரிநீர் கடந்த 15 நாட்களாக வெளியேறி வருகிறது.

அருவிபோல் ஆர்ப்பரித்து கொட்டிய நீர்

நேற்று காலை 6 மணி நிலவரப்படி அந்தியூர் பெரிய ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கன அடி உபரிநீர் வெளியேறி வருகிறது. அவ்வாறு வெளியேறும் உபரிநீரானது அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இந்த காட்சியை காணவும், குளிக்கவும் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்தியூர் பெரிய ஏரிக்கு தினமும் வந்த வண்ணம் உள்ளனர்.

குளித்து மகிழ்ந்தனர்

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பொதுமக்கள் அந்தியூர் பெரிய ஏரிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டிய நீரில் குளித்து மகிழ்ந்தனர்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் அங்கு ஆனந்த குளியல் போட்டனர். மேலும் சிலர் தங்களுடைய செல்போனில் அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டிய நீரை புகைப்படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்