மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

ஓட்டப்பிடாரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியானார்.

Update: 2023-03-28 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக பலியானார்.

வாலிபர்

தூத்துக்குடி சுப்பையாபுரம் பகுதியை சேர்ந்த ஆசைத்தம்பி மகன் பிரணவ்முகுந்த் (வயது 31). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புதியம்புத்தூரில் அவருக்கு தெரிந்த நபரிடம் பணம் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து புதியம்புத்தூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடியை நோக்கி சென்றுள்ளார்.

சாமிநத்தம் விலக்கு அருகே பாலத்தின் வளைவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயங்களுடன் அவர் ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்துள்ளார்.

சாவு

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், புதியம்புத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே பிரணவ் முகுந்த் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

அவரது உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்