தொழிலாளியை தாக்கிய நண்பர் கைது

குடிபோதையில் தகராறு: தொழிலாளியை தாக்கிய நண்பரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-17 18:45 GMT

வளவனூர்

விழுப்புரம் அருகே உள்ள எம்.பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 47). தொழிலாளியான இவரும், அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை(37) என்பவரும் நண்பர்கள் ஆவர். இவர்கள் கோலியனூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தின் அருகே அமர்ந்து மது குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது தண்டபாணியை ஏழுமலை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தண்டபாணி கொடுத்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்