கஞ்சா வழக்கில் கைதான 10 பேரின் ரூ.17 லட்சம் மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

கஞ்சா வழக்கில் கைதான 10 பேரின் ரூ.17 லட்சம் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டது.;

Update: 2022-12-12 15:59 GMT

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அருகே உள்ள இ.பி.காலனியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தாடிக்கொம்பு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 34 கிலோ கஞ்சாவை பதுக்கியதாக தெத்துப்பட்டியை சேர்ந்த வைரவன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் வைரவன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே கஞ்சா வழக்கில் கைதான 10 பேரின் சொத்துகளை முடக்கும்படி திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மேற்பார்வையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் தலைமையிலான தனிப்படையினர் நடவடிக்கையில் இறங்கினர்.

இதில் வைரவன் உள்பட 10 பேருக்கு சொந்தமான வீடு, நிலம், வாகனங்கள், வங்கி கணக்குகளில் இருக்கும் பணம் என மொத்தம் ரூ.17 லட்சத்து 20 ஆயிரத்து 629 மதிப்பிலான சொத்துகளை போலீசார் முடக்கினர். இதேபோல் கஞ்சா கடத்தல், விற்பனையில் ஈடுபடுபவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் பெயரில் இருக்கும் சொத்துகள் முடக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்