இலவச வேட்டி-சேலை வழங்கும் விழா
கொடைேராடு அருகே ரேஷன் கடையில் இலவச வேட்டி-சேலை வினியோகம் செய்யப்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கொடைரோடு அருகேயுள்ள ஜெகநாதபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் இலவச வேட்டி-சேலை வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு அம்மையநாயக்கனூர் பேரூராட்சி துணைத் தலைவர் விமல்குமார் தலைமை தாங்கி, 524 ரேஷன் கார்டுதாரர்களுக்கு வேட்டி-சேலை வழங்கினார். தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ஜெயசந்திரன் முன்னிலை வகித்தார். விற்பனையாளர் கருப்பையா வரவேற்றார். இதில் தி.மு.க. கிளை நிர்வாகிகள் சதீஷ் செல்வராஜ், குருசாமி, சொக்கலிங்கம், மணி, அம்மையநாயக்கனூர் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் மதன்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.