தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி-சேலைகள் வழங்கி வருகிறது. அதன்படி வருகிற ஜனவரி மாதத்தில் ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்க ஈரோடு மாவட்டத்திலிருந்து 240 பண்டல் (ஒரு பண்டலுக்கு 100 சேலைகள் வீதம் மொத்தம் 24 ஆயிரம் சேலைகள்) சேலைகள் பாளையங்கோட்டை தாசில்தார் அலுவலகத்திற்கு சரக்கு வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டது. அவை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என வருவாய்த்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.