இலவச கால்நடை மருத்துவ முகாம்
கீழப்பாவூர் அருகே கல்லூத்தில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
பாவூர்சத்திரம்:
கீழப்பாவூர் யூனியன் கல்லூத்தில் இலவச சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் முருகன் தலைமை தாங்கினார். வார்டு கவுன்சிலர்கள் பாப்பா ராமர், ஒளிவு லட்சுமி முருகன், சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ், கீழப்பாவூர் யூனியன் தலைவி காவேரி சீனித்துரை ஆகியோர் முகாமை தொடங்கி வைத்து, சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
மருத்துவர் மாறன், உதவியாளர் முருகையா, கால்நடை ஆய்வாளர் செய்யது இப்ராகிம் உள்ளிட்டோர் பங்கேற்று கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை, குடற்குழு நீக்கம், சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், சினைத்தரிக்காத கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை, நோய் மாதிரி பரிசோதனை, கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி போன்ற சேவைகளை மேற்கொண்டனர்.