இலவச கால்நடை மருத்துவ முகாம்

சீர்காழி அருகே காரைமேடு ஊராட்சியில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடந்தது

Update: 2023-10-12 18:45 GMT

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு ஊராட்சியில் தமிழக அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி தலைமை தாங்கினார். மயிலாடுதுறை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். முகாமில் கால்நடை டாக்டர்கள் கார்த்திகேயன், கவின் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து பசு, எருமை மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் ஊசி, சினைப் பரிசோதனை, ஆண்மை நீக்குதல், கன்று, ஆடுகளுக்கு குடற்புழு நீக்குதல் உள்ளிட்ட சிகிச்சைகளை அளித்தனர். பின்னர் சிறந்த கன்றுகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த முகாமில் சமூக ஆர்வலர் அம்பேத்கார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கால்நடைத்துறை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்