1,121 கால்நடைகளுக்கு இலவச சிகிச்சை

கோரவள்ளி கிராமத்தில் நடந்த முகாமில் 1,121 கால்நடைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் 23 பேருக்கு கறவை மாடுகள் வாங்கவும் நிதியுதவி வழங்கப்பட்டது.

Update: 2023-07-26 18:45 GMT

பனைக்குளம்.

கோரவள்ளி கிராமத்தில் நடந்த முகாமில் 1,121 கால்நடைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் 23 பேருக்கு கறவை மாடுகள் வாங்கவும் நிதியுதவி வழங்கப்பட்டது.

கால்நடை மருத்துவ முகாம்

மண்டபம் ஊராட்சி ஒன்றியம் கோரவள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ஆவின் நிர்வாகம் இணைந்து சிறப்பு கால்நடை மருத்துவ முகாமை நடத்தின. முகாமுக்கு காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கால்நடை பராமரிப்பு துறை மற்றும் ஆவின் நிர்வாகம் இணைந்து கால்நடைகளுக்கான சிறப்பு முகாம் நடத்த திட்டமிட்டு முதல் மருத்துவ முகாமை காவனூர் ஊராட்சியில் தொடங்கியது. 2-வது முகாம் கோரவள்ளி கிராமத்தில் நடைபெற்று உள்ளது. இந்த முகாமில் சுற்றுவட்டார பகுதி கால்நடை வளர்ப்போர், கால்நடைகளை கொண்டு வந்து தேவையான மருத்துவ சிகிச்சையை பெற்று பயனடைந்துள்ளனர். முகாமில் 148 கறவை மாடுகளும், 460 வெள்ளாடுகளும், 33 ஆடுகளும், 198 கோழிகள், 12 நாய்கள் என 1,121 கால்நடைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளன.

23 பேருக்கு கடன் உதவி

ஆவின் நிர்வாகம் மூலம் 23 பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் கறவை மாடுகள் கடன் வழங்கும் திட்டத்தில் கடன் உதவித் தொகையையும் 22 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பீட்டில் கேசிசி கடன் திட்ட உதவிக்கான ஆணை என மொத்தம் 45 பயனாளிகளுக்கு ரூ.30.98 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் இளங்கோவன், பால்வளத்துறை இணைப்பதிவாளர் புஷ்பலதா, காரைக்குடி ஆவின் நிறுவன உதவி பொது மேலாளர் பாண்டிச்செல்வி, ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவிதாயினி கவிதா கதிரேசன், கூட்டுறவு சங்க முதுநிலை ஆய்வாளர் அண்ணாமலை, கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர்கள் ராதாகிருஷ்ணன், நேரு குமார், கால்நடை மருத்துவர்கள் நிஜாமுதீன், சித்தி மர்ஜிதா, டாப்னி, கார்த்திகேயன், ரஜினி, விஜயகுமார், கோபிநாத், மற்றும் ஆவின் நிறுவன கண்காணிப்பு அலுவலர் ரவிச்சந்திரன், கோரவள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கோகிலாவாணி, தி.மு.க. மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் பி.டி. ராஜா, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் நாகாச்சி ராஜீவ் காந்தி, மண்டபம் ஒன்றிய செயலாளர்கள் (மேற்கு) பிரவீன் குமார், (கிழக்கு) நிலோபர் கான், புதுமடம் ஊராட்சி மன்ற தலைவர் காமில் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்