தாட்கோ சார்பில் பல்வேறு பணிகளுக்கான இலவச பயிற்சி

தாட்கோ சார்பில் பல்வேறு பணிகளுக்கான இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது என்று கலெக்டர் கூறினார்.

Update: 2023-03-09 18:27 GMT

திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் பேப்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு பணிகளுக்கான தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.

அதன்படி பல்வேறு தேர்வுகளுக்கு 2023-ம் ஆண்டிற்கான தேர்வு நாட்காட்டி ஆதிகாரபூர்வ http://ssc.nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பல்வேறு தேர்வுகளுக்கான 11 ஆயிரம் காலி பணியிடங்கள் தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளது.

இத்தேர்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற தாட்கோ மூலமாக இலவச பயிற்சி VERANDA RACE நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படவுள்ளது.

இதில் 18 முதல் 32 வயது வரை உள்ள பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும்.

இப்போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதிகேற்ப பணியமர்த்தபடுவார்கள்.

மேற்கண்ட பயிற்சியில் விண்ணப்பிக்க தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்