மத்திய அரசு பணிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்
மத்திய அரசு பணிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அரியலூரில் இன்று தொடங்குகிறது.;
மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள மல்டி டாஸ்கிங் (தொழில்நுட்பம் அல்லாத) ஊழியர்கள் மற்றும் ஹவில்தார் பணிக்காலியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் இன்று (திங்கட்கிழமை) முதல் அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த பணிக்காலியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல்களுடன், பாஸ்போர்ட்டு அளவு புகைப்படம், தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் சுய விவரக்குறிப்புகளுடன் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மையத்தினை நேரிலோ அல்லது 04329-228641 என்ற தொலைபேசி எண்ணையோ அல்லது 9499055914 என்ற செல்போன் எண்ணையோ தொடர்பு கொள்ளலாம். இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது. எனவே அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வினை எதிர்கொள்ளும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையலாம் என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.