கறவை மாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம்

கறவை மாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.

Update: 2023-04-24 18:49 GMT

மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் கறவை மாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நாளைமறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது.

அறிவியல் ரீதியான கறவை மாடு வளர்ப்பில் பராமரிப்பு முறைகளான இனங்களை தேர்வு செய்தல், பண்ணை வீட்டமைப்பு, கறவை மாடுகளை தாக்கும் நோய்கள் அவற்றை தடுக்கும் முறைகள், மூலிகை மருத்துவ சிகிச்சை முறைகள், பசுந்தீவன உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் கலப்பு தீவனம் தயாரித்தல் ஆகிய தலைப்புகள் குறித்து பல்கலைக்கழக பேராசிரியர்களால் பயிற்சி நடத்தப்பட உள்ளது.

இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் நாளைமறுநாள் காலை 10.30 மணிக்குள் வந்து பயிற்சியில் பங்குகொள்ளலாம். மேற்கண்ட தகவலை மையத்தின் பேராசிரியர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்