ஏழை பெண்ணுக்கு இலவச தையல் எந்திரம்

ஏழை பெண்ணுக்கு இலவச தையல் எந்திரம் வழங்கப்பட்டது.

Update: 2023-04-15 20:10 GMT

இட்டமொழி:

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, ஏர்வாடி பேரூராட்சி வட்டார ஆதிதிராவிடர் கல்வி மற்றும் பொது நலச்சங்கம் நடத்திய அம்பேத்கர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நாங்குநேரி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி வி.நாராயணன் கலந்து கொண்டு ஏழை பெண்ணின் வாழ்வாதாரம் பயன்பெறும் வகையில் தையல் எந்திரத்தை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் நகர அ.தி.மு.க. செயலாளர்கள் முருகன், பாபு, மாநில விவசாய அணி துணைச்செயலாளர் பெரும்படையார், ஏர்வாடி வட்டார ஆதிதிராவிடர் கல்வி மற்றும் பொதுநலச்சங்க கவுரவ தலைவர் ஆனந்த், தலைவர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்