பெண்களுக்கு இலவச சேலை
எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கு இலவச சேலைகளை ரெட்டியார்பட்டி நாராயணன் வழங்கினார்
இட்டமொழி:
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் பாளையங்கோட்டை ஒன்றியம் ரெட்டியார்பட்டியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி வி.நாராயணன் தலைமை தாங்கி, எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் 100 பெண்களுக்கு இலவச சேலைகள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ரெட்டியார்பட்டி முன்னாள் ஊராட்சி செயலாளர் வி.எஸ்.மணிப்பிள்ளை, கிளை செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.