தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வெறிநோய் தடுப்புமற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக தஞ்சை மாவட்ட எஸ்.பி.சி.ஏ. சங்கத்திற்கு சொந்தமான மாதாக்கோட்டையில் உள்ள செல்லப்பிராணிகள் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில் இலவசமாக வெறிநோய் தடுப்பூசி போடப்படுகிறது. இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை இந்த தடுப்பூசி போடப்படுகிறது. இதனை நான் தொடங்கி வைக்கிறேன். எனவே பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி 3 மாதம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தங்கள் செல்லப்பிராணிகளுக்கு இலவசமாக வெறிநோய் தடுப்பூசி செலுத்தி, கொடிய நோயில் இருந்து தங்கள்செல்லப்பிராணிகளை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.