ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. முகாமில் கண் சம்பந்தப்பட்ட நோயாளிகள் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.