இலவச வழிகாட்டி பயிற்சி கருத்தரங்கு

தேனி டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற இலவச வழிகாட்டி பயிற்சி கருத்தரங்கு நடந்தது.

Update: 2022-09-04 15:43 GMT

தேனியில் அல்மைட் ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில் டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வில் எளிதில் வெற்றி பெறுவது குறித்த இலவச வழிகாட்டி பயிற்சி கருத்தரங்கு நடந்தது. இதில் மதுரை நேஷனல் இன்ஸ்டிட்யூட் நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம் கலந்துகொண்டு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி பேசினார். அருண்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குனர் அருண்குமார் பயிற்சி அளித்தார். அல்மைட் ஐ.ஏ.எஸ். அகாடமி செயல் அதிகாரி சுபாஷ், அகாடமி நிர்வாகி ராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்று அரசு அலுவலராக பணியாற்றும் அம்பிகேஷ்வரன் கலந்து கொண்டு பேசினார். இதில், ஆழ்மை அறக்கட்டளை நிர்வாகிகளாக ராஜா அழகணன், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜமோகன், வக்கீல்கள் முத்துராமலிங்கம், சந்தான கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்