இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

Update: 2023-06-20 19:42 GMT

தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி தஞ்சையை அடுத்த பூதலூர் தாலுகா வெண்டையாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, கும்பகோணம் தாலுகா திருப்புறம்பியம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அதிராம்பட்டினம் துர்காசெல்லியம்மன் திருமண மண்டபம் ஆகிய 3 இடங்களில் வருகிற 24-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவமுகாம் நடக்கிறது.

முகாமில் பொதுவான உடல் பரிசோதனை, பல், காது, மூக்கு, தொண்டை, கண், குழந்தைகள் நலம், பெண்கள் நலம், மகப்பேறு, பொது மருத்துவம், சித்த மருத்துவம், காசநோய் மற்றும் தொழுநோய் உள்ளிட்ட அனைத்திற்கும் பரிசோதனை நடக்கிறது. அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் முகாமில் பங்கேற்க உள்ளனர். மேல்சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வழங்கப்படும். எனவே பொதுமக்கள் சிறப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்