கூட்டுறவு வார விழாவையொட்டி இலவச மருத்துவ முகாம்
கூட்டுறவு வார விழாவையொட்டி இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.;
ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் மதுரை ராக்ஸ் மருத்துவமனை ஆகியவை சார்பில் 69-வது கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு வங்கி வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் மனோகரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ராம்கோ பண்டகசாலை மேலாண்மை இயக்குனர் முருகன், ராமநாதபுரம் சரக துணை பதிவாளர் சுப்பையா, வங்கியின் பொது மேலாளர் கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் சுமார் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.