பொள்ளாச்சி அருகே இலவச மருத்துவ முகாம்
பொள்ளாச்சி அருகே இலவச மருத்துவ முகாம்;
நெகமம்
பொள்ளாச்சி அடுத்த சோமந்துறை சித்தூர், பெத்தநாயக்கனூர் அண்ணா நகர், நாககன்னி அம்மன் கோவில், ஸ்ரீ அம்சவேணி அம்மாள் பொது அறக்கட்டளை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு ஆனைமலை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அம்சவேணி அம்மாள் முன்னிலை வகித்தார். முகாமில் 200-க்கும் மேற்பட்டோருக்கு இலவச ரத்த பரிசோதனை, உடல் எலும்பு வலு, சர்க்கரை, ரத்த அழுத்தம் பரிசோதனை மற்றும் பல்வேறு பரிசோதனைகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பணியாளர்கள் செய்து இருந்தனர்.