மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
காட்பாடியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.;
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகமும் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில நடந்தது. முகாமில் பிறப்பு முதல் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கே.எம்.ஜோதீஸ்வரபிள்ளை தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.மகேஸ்வரி, காட்பாடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சாமுண்டீஸ்வரி, ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
முகாமில் 97 மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.